அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் வரவிருக்கும் தியாகிகள் நினைவு தினம் மற்றும் 50வது தேசிய தினத்தை முன்னிட்டு அங்கு பணிபுரியும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையை அரசாங்க மனித வளங்களுக்கான பெடரல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி டிசம்பர் 1 புதன்கிழமை முதல் டிசம்பர் 3 வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்கள் அரச ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 சனிக்கிழமை வார இறுதி நாள் என்பதால் மத்திய அரச ஊழியர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை தொடர்ந்து கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் டிசம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் பணியைத் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில வருடங்களாக தனியார் துறை ஊழியர்களுக்கும் அரசதுறை போலவே விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பு மனிதவள மற்றும் எமிரேடிசன் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் நிறுவன ஊழியர்களுக்கு 4 நாட்களும், சனிக்கிழமை வேரை நாளாக இருக்கும் ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
(கலீஜ் தமிழ்)