எல்லைக் கட்டுப்பாட்டை மேலும் தளர்த்த அவுஸ்திரேலியா தீர்மானம்!

எல்லைக் கட்டுப்பாட்டை மேலும் தளர்த்த அவுஸ்திரேலியா தீர்மானம்!

கொரோனா பரவலையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய எல்லைக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் மேலும் தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அறிவித்துள்ளார்.

இதன்படி வெளிநாட்டு மாணவர்கள், skilled migrants, மனிதாபிமான விசாவின் கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு அவுஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டிருநதால், பயண விதிவிலக்கு அனுமதி நாடு திரும்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், அந்தந்த மாநிலங்களின் சட்டங்களுக்கேற்ப அமையவுள்ளது. இத்தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் பிற நாடுகளில் இருந்து சுமார் ர் 2 லட்சம் அவுஸ்திரேலிய வீசா வைத்திருப்போர் டிசம்பர் முதலாம் திகதி நாடு திரும்புவர் என்று எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 1ம் திகதி தொடக்கம், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அவுஸ்திரேலியர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள், விதிவிலக்கு அனுமதி பெறாமல் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பக்கூடியதாக உள்ள பின்னணியில், தற்போது ஏனையவர்களும் ஆஸ்திரேலியா வருவதற்கான வழியேற்பட்டுள்ளது.

அதேநேரம் நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூருடன் செய்துகொள்ளப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயண ஏற்பாட்டினைப் போலவே, ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடனும் அவுஸ்திரேலியா ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளது.

இதன்கீழ் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டவர்கள் டிசம்பர் 1 முதல், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடின்றி அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும்

கொரோனா பரவல் காரணமாக சுமார்ட இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய எல்லைகள் பூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image