வௌிநாட்டு வேலைநாட்டுப் பணியகத்தில் பதிவு செய்ய சலுகை்காலம்
வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் தம்மை பணியகத்தில் பதிவு செய்வதற்கான சலுகைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி வரை தம்மை பதிவு செய்துக்கொள்ளாத இலங்கையர்கள் பதிவு செய்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு நாடி வௌிநாடுகளுக்கு செல்லும் போது இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தம்மை பதிவு செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளபோதிலும் பலர் அவ்வாறு தம்மை பதிவு செய்யாமல் வௌிநாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு பணியகம் பொறுப்பு கூறாது. எனவே அவ்வாறு சென்றுள்ளவர்கள் தம்மை பதிவு செய்வதற்கு சலுகை்ககாலத்தை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கியுள்ளது.
அவ்வாறு பதிவின்றி வௌிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் இலங்கையர்கள் அந்தந்த நாட்டில் உள்ள இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு தூதரகத்தில் செல்லுபடியாகும் வீசா அனுமதி, தொழில் ஒப்பந்தம் அல்லது நியமனக்கடிதத்தை சமர்ப்பித்து உரிய கட்டணங்களை செலுத்தி பதிவை மேற்கொள்ள முடியும்.