வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோருக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இன்று (19) மீண்டும் திருத்தப்பட்டு வௌியிடப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளுக்கமைய, நாட்டுக்குள் வரும் அனைவருக்கும் விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் பிசிஆர் பரிசோதனை எதிர்மறையாக இருப்பின் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியமில்லையெனவும் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் தனிமைப்படுத்தலுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரு தடுப்பூசிகளும் செலுத்திக்கொள்ளாதவர்களுடைய பிசிஆர் பரிசோதனை முடிவு எதிர்மறையாக இருப்பினும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.