ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை
ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரில் காபுலில் உள்ள இலங்கை தூதரகத்தினூடாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுமார் 50 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தற்போது உள்ளனர். அவர்கள் நாடு திரும்ப விரும்பும் பட்சத்தில் அவர்களை அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை தலிபான் தீவிரவாதிகள் சுற்றிவளைத்ததையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு வௌியேறி தஜிகிஸ்தான் நாட்டை சென்றடைந்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.