பிரான்சில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த 'சுகாதார பாஸ்'
பிரான்சில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு 'சுகாதார பாஸ்' நடைமுறைப்படுத்தப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்சில் நீண்டதூர ரயில் மற்றும் பஸ் போக்குவரத்தை பயன்படுத்த விரும்புகிறவர்கள் QRகுறியீடு மூலம் தடுப்பூசி செலுத்திக்கொண்டமையை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் வேகமாக டெல்டா திரிபு வைரஸ் பரவி வருகின்றமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.