பல கட்ட சோதனைகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதையடுத்து டுபாய் விமான நிலையத்தில் தற்போது 'ஸ்மார்ட் டிரவல் (Smart Travel) முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதனூடாக பயணிகள் தமது அடையாள ஆவணங்களை பயன்படுத்தாமல் பயணிக்க உதவுகிறது.
பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி - முக மற்றும் கருவிழி என்பவற்றினூடாக அடையாளங்காணப்படுகிறது - பயணிகள் இப்போது தங்கள் பயணிக்கவுள்ள விமானம் மற்றும் ஏனைய வசதிகளை இதனூடாக சரிபார்க்கலாம். இலகுவாக விமானநிலையத்திற்குள் சென்று விமானத்தில் செல்ல முடியும்.
எதிர்காலத்தில், குடியகழ்வு முனையங்கள் இருக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் நேரடியாக விமானநிலையத்திற்குள் செல்லமுடியும்.அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க மக்கள் விமான நிலையம் வழியாக உலாவ முடியும். குடியேற்ற முறைகளை முடிக்க எடுக்கப்பட்ட நேரம் ஒரு நபர் எவ்வளவு விரைவாக நடக்க முடியும் என்பதைப் பொறுத்தது என உயரதிகாரி ஒருவர் கருத்து வௌியிட்டுள்ளார்.. ”
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் (டி.எக்ஸ்.பி) ஒருங்கிணைந்த பயோமெட்ரிக் தொடர்பு இல்லாத பாதை, 2019 ஆம் ஆண்டில் கெய்டெக்ஸில் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டது, பெப்ரவரி 22 திங்கள் அன்று குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தில் (ஜி.டி.ஆர்.எஃப்.ஏ) உயர் அதிகாரிக இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தனர்.
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இப்புதிய தொடர்பு இல்லாத ஸ்மார்ட் பயண முறைக்கு அடித்தளமிட்டது. தொடர்புகளில் பரவும் தொற்றை தவிர்க்க பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பை இப்புதிய முறை குறைக்கிறது. குறிப்பாக செக் இன் கவுண்டர் முதல் விமானத்தில் ஏறும் வரையில் தொடர்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவையாக உள்ள வகையில் இப்புதிய முறை தொழில்நுட்பம் அமைந்துள்ளது.