சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 13 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்!

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 13 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்!

சட்டவிரோதமாக பிரான்ஸுக்கு செல்லும் நோக்கில் படகில்  சென்று ரியூனியன் தீவுக்கு அருகில் பிரான்ஸ் கடரோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 13 இலங்கையர்கள் நேற்று (08) மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

பிரான்ஸுக்கு சொந்தமான விமானத்தில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இலங்கை வந்தடைந்த குறித்த 13 பேரை பிரான்ஸ் அதிகாரிகள் இலங்கை குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியதால், விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையின் பின்னர், இந்தக் குழுவை படகு மூலம் ரீயூனியன் தீவுக்கு அழைத்துச் சென்ற நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரீயூனியன் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image