காஸாவில் சிக்கியிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

காஸாவில் சிக்கியிருந்த 11 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

காஸாவில் தங்கியிருந்த 11 இலங்கையர்கள் நேற்று (05) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

கட்டார் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

2 குடும்பங்களைச் சேர்ந்த 2 பெண்களும் 09 குழந்தைகளும் நாடுதிரும்பியவர்களில் உள்ளடங்குவதாக  பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி அலுவலக பிரதானி பேர்னாட் குரே தெரிவித்தார்.

இதேவேளை, காஸா வட பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் மேலும் 4 இலங்கையர்கள் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 06 இலங்கையர்கள் பலஸ்தீனத்திற்குட்பட்ட பகுதியில் தங்கியுள்ளதாகவும் பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி அலுவலக பிரதானி குறிப்பிட்டார்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image