A/L பரீட்சை காலத்தில் மின்தடையா? கல்வி அமைச்சரின் அறிவித்தல்

A/L பரீட்சை காலத்தில் மின்தடையா? கல்வி அமைச்சரின் அறிவித்தல்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாத காலப்பகுதியில் நடைபெறவுள்ளதால், மின் துண்டிப்பு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, மின் கட்டண அதிகரிப்பால் மேலும் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வருமென குறிப்பிட்ட அமைச்சர், மின் கட்டண அதிகரிப்பை தவிர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சபையில் தெரிவித்தார்

அது தொடர்பில் மின்சார சபை மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மின் கட்டணத்தை அதிகரிப்பது மனிதாபிமானமற்ற செயல். இதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை,எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இந்தக் காலத்தில் மின்சார விநியோகத்தை தடை செய்யவோ, மின் கட்டணங்களை அதிகரிக்கவோ முடியாது. அவ்வாறு செயல்பட்டால், மூன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் பாதிக்கப்படுவர்.

இதனால் மின் துண்டிப்பு மற்றும் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் குறித்த அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த விடயத்தில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image