உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தகால ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 8000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.
பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மூலம் - நியூஸ்பெஸ்ட்