ரயில்வே திணைக்களத்தில் 8,000 வெற்றிடங்கள்

ரயில்வே திணைக்களத்தில் 8,000 வெற்றிடங்கள்

60 வயதுக்கு மேற்பட்டோர் கடந்த முதலாம் திகதியுடன் ஓய்வு பெற்றதை அடுத்து ரயில்வே திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் நாளைய தினம் அரச சேவைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் தரப்பினருடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதோடு இதன்போது வேதனத்தை செலுத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் ரயில் சேவையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அவசியமான தரப்பினரை குத்தகை அடிப்படையில் மேலும் ஒரு வருடத்துக்கு சேவையில் இணைத்து கொள்வதற்காக அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்படவுள்ளது.

கடந்த முதலாம் திகதி 60 வயது பூர்த்தியடைந்த ரயில்வே திணைக்கள இயந்திர சாரதிகள், உதவியாளர்கள், ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றனர். 

இதற்கமைய ரயில்வே திணைக்களத்தில் 8 ஆயிரம் பேருக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பல ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image