8 நிபந்தனைகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு சலுகை!

8 நிபந்தனைகளின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு சலுகை!

தற்போதைய போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு 8 நிபந்தனை அடிப்படையில் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சேவை இணைப்பானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் மாத்திரம் நடைமுறையில் இருக்கும் என்பதுடன்,, அனைத்து வகையிலான இணைப்புகளும், பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த இரண்டு பாடசாலைகளின் அதிபர்களின் எழுத்து மூலமான இணக்கப்பாட்டின் அடிப்படையில் மாத்திரம் இடம்பெற வேண்டும் எனவும் இதன்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்த கல்வி அமைச்சு தீர்மானம்

1. ஒரே மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு இடையே தேசிய  பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்களை இணைப்புச்செய்யும்போது குறித்த மாகாண கல்விப் பணிப்பாளரின் பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

2. இரண்டு மாகாணங்களுக்கு இடையில் மாகாணசபை பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைப்புச் செய்தலானது, குறித்த மாகாணங்களின் மாகாண அரச சேவை ஆணைக்குழு சபையின் செயலாளரின் அனுமதியின் பேரில் அதனை முன்னெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

3. மாகாணங்களுக்கு இடையில் இடம்பெறும் தேசிய பாடசாலைகளுக்கு இணைப்புச்செய்தல் கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளரினால் (ஆசிரியர் சேவை இடமாற்றம்) முன்னெடுக்கப்பட வேண்டும்.

4. கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் குறித்த பாடசாலையில் மேலதிக ஆசிரியராயின்,  அவர் அல்லது அவள் சார்பில் பதிலீட்டாளரை பெற்றுககொடுக்கவேண்டிய அவசியமற்றது.

5. கோரிக்கை விடுக்கும் ஆசிரியர் பாடசாலையில் மேலதிக ஆசிரியர் அல்லாவிட்டால் பொருத்தமான பதிலீட்டாளரை வழங்கியதன் பின்னர் இணைப்புச்செய்ய வேண்டும்.

6. அதிபர்களின் இணக்கப்பாட்டுக்ககமைய பொருத்தமான இடமாற்றம்   செய்யப்படும் முறைபோன்று அந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இணைப்பு குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்.

7. மகப்பேற்றின் காரணமாக மற்றும் வைத்தியரின் பரிந்துரைக்கு அமைய இடம்பெறுகின்ற இணைப்புகளுக்கு, குறித்த மருத்துவசான்று அறிக்கை ஊடாக உறுதிப்படுத்திக்கொண்டு இடம்பெறவேண்டும். (2007/20 சுற்றறிக்கையின் 3.4.கை்கு அமைய)

8. மாகாண கல்விப் பணிப்பாளரினால் தேசிய பாடசாலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் இணைப்புக்களுக்கான கடிதத்தின் பிரதி கல்வி அமைச்சின் கல்விப் பணிப்பாளருக்கு (ஆசிரியர் சேவை இடமாற்றம்) அனுப்பப்படவேண்டும்.

இது தொடர்பில் அனைத்து மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு சபையின் செயலாளர்களுக்கும், அனைத்து மாகாண கல்வி செயலாளர்களுக்கும், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும், அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும், அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அறியப்படுத்தப்பட்டுள்ளது .

நாட்டில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கிலும், மாணவர்களுக்கு உரிய கல்வியை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன், இந்த இணைப்புகளுக்கு அமைய உரிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்குவதற்கான உரித்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

edu_cir.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image