பரீட்சைக் கடமை கொடுப்பனவை 60% வரை உயர்த்த நடவடிக்கை

பரீட்சைக் கடமை கொடுப்பனவை 60% வரை உயர்த்த நடவடிக்கை
உயர்தரம், சாதாரண தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளின் மதிப்பீடுகள் மற்றும் கடமை கொடுப்பனவுகளை 60 வீத்தால் அதிகரிப்பதற்கான முன்மொழிவை பரீட்சைகள் திணைக்களம் கல்வி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.
 
தற்போதைய நெருக்கடியான பொருளாதாரச் சூழலின் அடிப்படையில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணை தற்போது சம்பளம் மற்றும் ஆளணி ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சும் ஆணைக்குழுவும் தனியான குழுக்களை நியமித்துள்ளன.
 
 
 
 
 
பரீட்சை கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் இதற்கு முன்னர் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களால் பரீட்சைகள் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.
 
ஆனால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக பரீட்சை மதிப்பீடுகள் மற்றும் கடமைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொள்ளும் போக்கு காணப்படுவதனால், இம்முறை கொடுப்பனவு உயர்வு தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
அதன்படி அடுத்த ஆண்டு முதல் 60% இல்லாவிட்டாலும் உதவித்தொகை ஓரளவு உயர்த்தப்படும் என வட்டாரங்கள் தெரிவித்தன.
 
மூலம் - டெக்மோ(ர்)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image