60,000 வேலைவாய்ப்பு திட்டத்தில் எஞ்சியோரையும் ஆட்சேர்க்க கோரிக்கை

60,000 வேலைவாய்ப்பு திட்டத்தில் எஞ்சியோரையும் ஆட்சேர்க்க கோரிக்கை

60,000 வேலைவாய்ப்பு திட்டத்தில், எஞ்சியுள்ளவர்களை ஆட்சேர்க்க அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனக் கோருவதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வேலையற்ற பட்டதாரிகளை பயிலுனர் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அண்மையிலும் ஒரு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிலே 897 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ள சௌபாக்கியத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் அடிப்படையில், 60 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்தது இதற்கமைய இரண்டு கட்டங்களில் 52,589 பேர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும், 60,000 பேர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளதாக ணெ;மையில், அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியிருந்தார். எனினும் இதில் 60 ஆயிரத்தை பூர்த்தி செய்வதற்காக இன்னும் 7,411 பேரே ஆட்சேர்ப்பு செய்யவேண்டும். எனவே எஞ்சியுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு இந்த தொழில் வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனக் கோருவதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image