விசாரணைக்காக 6 அரச நிறுவனங்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

விசாரணைக்காக 6 அரச நிறுவனங்களை கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு

ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக 06 அரச நிறுவனங்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு என அழைக்கப்படும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன. 

இலங்கை தேயிலைச் சபை, கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனம், கொழும்பு பல்கலைக்கழகம், தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம், எல்கடுவ பிளான்டேசன் போன்ற அரச நிறுவனங்களே கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.

இலங்கை தேயிலைச் சபை இன்று(19) அழைக்கப்பட்டுள்ளதுடன் கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தை நாளை(20) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு எதிர்வரும் 3ஆம் திகதி கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image