மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவிற்கு விண்ணப்பங்கள் கோரல்

மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவிற்கு விண்ணப்பங்கள் கோரல்
மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
கணக்காய்வுக்குட்படும் நிறுவனமொன்றின் பிரதான கணக்கீட்டு அலுவரினால் செய்யப்பட்ட ஒரு தீர்மானம் மூலம் இன்னலுறும் எவரேனுமாள் அத்தகைய தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்யக்கூடிய குழு 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்படவுள்ள மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழுவாகும்.
 
அதற்கமைய, கணக்காய்வு, சட்டம் மற்றும் அரசாங்க நிதி முகாமைத்துவம், பொது நிர்வாகம் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் அனுபவமுடையவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்க முடியும். தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் இலங்கை அரச கணக்காய்வுச் சேவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.
 
அதற்கமைய, இதற்கான விண்ணப்பங்கள் www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரிப் படிவத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2023 ஒக்டோபர் 09 அன்று அல்லது அதற்கு முன்னர் அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அல்லது அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.
 
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலாயின் அதன் விடயமாக, ‘அரசியலமைப்புப் பேரவை: மிகைக்கட்டண மேன்முறையீட்டுக் குழு’ எனக் குறிப்பிடப்படுதல் வேண்டும்.
 
🔗 விண்ணப்பங்கள்: https://www.parliament.lk/.../sec.../advertisements/view/291

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image