திடீர் பணிப்பகிஷ்கரிப்பினால் சுமார் 50 ரயில் சேவைகள் ரத்து

திடீர் பணிப்பகிஷ்கரிப்பினால் சுமார் 50 ரயில் சேவைகள் ரத்து

ரயில் சாரதிகள் சங்கம் இன்று (07) ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 50 ரயில் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாலையில் மேலும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

09.05.2018 திகதியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கமைய இதுவரை ரயில் சாரதிகள் புதிதாக இணைத்துக்கொள்வதற்கான செயன்முறை தயாரிக்கப்படாமையினால் புதியவர்களை உள்வாங்க முடியாதுள்ளமை, முன்னாள் ரயில் பொது முகாமையாளரின் தலையீட்டினால் மூன்றாம் தரத்தில் உள்ள ரயில் சாரதிகளை இரண்டாம் தரத்திற்கு உயர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றமை, அத்துடன் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதுடன் தாமதமாகி வருகின்றமைக்கு உரிய நடவடிக்கை எடுக்காமை ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி இப்பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேற்படி விடயங்களுக்கான தீர்வுகள் கிடைக்கும் வரை தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக லொக்கோமோடிவ் ஒப்பரேட்டிங் பொறியிலாளர் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com