நாட்டில் 50 கிராம சேவகர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் தலைவர் சுமித் கொடிகார இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், 100 கிராம சேவகர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.