பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கியதில் பல பிரச்சினைகள்

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கியதில் பல பிரச்சினைகள்

பயிலுநர் பட்டதாரிகளாக ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் குற்றம் சுமந்தியுள்ளது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தமிகா முனசிங்க அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019 ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், 16 ஆயிரத்து 800 பட்டதரிகள், பயிலுநர் பட்டதாரிகளாக அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்டனர்.

அவர்கள் ஒரு வருடமும் ஏழு மாதமும் நிறைவடைந்து நிரந்தர நியமனம் வழங்கப்படாதிருந்தனர். அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு நாங்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்தோம். ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

எனவே அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் போது 4 மாதங்கள் சேவை காலம் இல்லாமல் போயுள்ளது. 20,000 ரூபாய் என்ற கொடுப்பதற்கு தான் இந்த பட்டதாரிகளை அரச சேவையில் ஈடுபட்டனர்.

அவர்கள் ஒரு வருடமும் 7 மாதங்களும் என மொத்தமாக 19 மாதங்கள் பயிற்சி பெற்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டன. இவ்வாறு நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட போது பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

1. ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி பெற்ற நிறுவனங்களில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறவில்லை. விவசாய திணைக்களத்தில் ஒன்றரை ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தொழில் கிடைக்கும் காலம் இது.

2. பட்டத்திற்கு அமைப்பான விடயங்களை பார்த்து இந்த நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதில்லை. இதுவரையில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் தொழிலுக்கு அட் சேர்க்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு 70 பேரளவில் தற்போது வீடுகளில் இருக்கின்றன. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் உரிய அந்த பட்டம் பெறவில்லை என்று அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. 11 ஆயிரம் பட்டதாரிகளில்தான் இந்த தெரிவுகள் இடம்பெற்றன. இந்து இது சரியாக இடம்பெறவில்லை.

இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image