ஆசிரியர், அதிபர்களுக்கு எதற்காக 5,000 ரூபா கொடுப்பனவு? கல்வி அமைச்சர் விளக்கம்

ஆசிரியர், அதிபர்களுக்கு எதற்காக 5,000 ரூபா கொடுப்பனவு? கல்வி அமைச்சர் விளக்கம்

ஆசிரியர், அதிபர்களுக்கு எதற்காக 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகிறது என்பது தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.



ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேள்வி - சுற்றறிக்கை மூலமாக இதனை தங்களுக்கு வழங்குமாறு சில ஆசிரியர் சங்கங்கள் கோருகின்றன. அதற்கு நீங்கள் தயாரா?

பதில் - சுற்றறிக்கை ஒன்றை உரிய நேரத்திற்கு அனுமதியளித்தது நிதி தொடர்பான அறிவித்தல் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வரவு செலவு திட்டம் மூலம் அறிவிக்கப்படும்.

இதற்கமைய நான்கு கட்டங்களாக இந்த அதிகரிப்புக்கு அமைவான நிதியை வழங்குவதாக நாங்கள் கூறியிருக்கின்றோம்.

ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்பட்டிருக்கின்றது. அரசாங்கம் வாக்குறுதி அளித்த வேதனையும் மீறவில்லை. நிதி தொடர்பான திடீர் பிரச்சினை காரணமாகவே இரண்டு மாதங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு சேர்க்கப்பட்டுள்ளது.

கேள்வி - நிரந்தர தீர்வு வழங்கப்படுமாயின் ஏன் இந்த 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குகின்றீர்கள்?

பதில் - இணையத்தள முறைமையில் அதிபர் ஆசிரியர்கள் வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்காகவே நிதியமைச்சர் கோரப்படாத நிதி ஏற்பாட்டை கொடுப்பனவாக இரண்டு மாதங்களுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image