ஆசிரியர்-அதிபர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவையின் முக்கிய தீர்மானங்கள் இதோ

ஆசிரியர்-அதிபர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவையின் முக்கிய தீர்மானங்கள் இதோ

ஆசிரியர்-அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 
ஆசிரியர் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு அடுத்த வரவு-செலவு திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் வரை, மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கொவிட் பரவல் காரணமாக, இணையவழி முறைமையில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
 
ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 
இதற்கமைய, 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக, நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷ அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு, ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.
 
சம்பள முரண்பாட்டிற்கு தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை 50ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image