பயிலுனர் பட்டதாரிகள், கல்வியில் கலாசாலை டிப்ளோமாதிரிகள் ஆசிரியர் ஆலோசகர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் ஆகியோரை மாகாண ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க நடவடிக்கை
எடுப்பதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (21) மத்திய மாகாண பிரதம செயலாளர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,
மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவின ஆலோசனையின் பிரதிபலனாக மாகாணத்திற்கு அவசியமான சுமார் 4000 ஆசிரியர்களை எதிர்காலத்தில் இணைத்துக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டமிடலுக்கு அமைய நியமனங்களை உரியவாறு மேற்கொள்வதற்கும், சேவையின் திருப்தி தன்மையை அதிகரிப்பதற்கும் இலக்காகக் கொண்டு விசேட வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்த அவர் மாகாண கல்வி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.