ஊழியர் சேமலாப நிதிய முதலீடு - மூன்று மாதங்களில் 3,500 கோடி பெறுமதி வீழ்ச்சி
இலங்கையின் பாரிய மற்றும் பரந்த சமூக பாதுகாப்பு முறையான ஊழியர் சேமலாப நிதியத்தினால் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடானது 2022ம் ஆண்டு முதலாம் காலாண்டில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
2021 டிசம்பர் 31ம் திகதியாகும் போது கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 66 பங்குகளுக்கு செய்யப்பட்ட முலீடுகளில் சந்தைப் பெறுமதி 111.96 பில்லியனாக இருந்தது. எவ்வாறு இருப்பினும் இப்பெறுமதி 2022 மார்ச் 31 திகதியாகும் போது 76.48 பில்லியன் ரூபாவாக அதாவது 35. 48 பில்லியன் ரூபாவால் குறைவடைந்துள்ளது. அதாவது 3,548 கோடி ரூபா வீதமாக கூறுவதானால் 31.68 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட முதலீடு மற்றும் அதன் சந்தைப் பெறுமதி கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.