இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 82 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
338 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 420 ரூபாவாகும்.
ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 77 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
337 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் புதிய விலை 450 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 400 ரூபா வரையிலும்
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 445 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுமென எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், இன்று(24) அதிகாலை 03 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிபெட்கோவின் விலை அதிகரிப்பிற்கு அமைய, அதேவிலை அளவுகளில் எரிபொருட்களின் விலைகளை தாமும் அதிகரிப்பதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.