இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று போலந்து நாட்டுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு (E-Passport) விலைமனு கோரல் காரணமாக, கடவுச்சீட்டு வழங்குவதில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குள் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தற்போது திணைக்களத்துக்கு முன்பாகவும் நீண்ட வரிசை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இணையவழியூடாக கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்யும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் தொகையொன்று ஒக்டோபர் 25 ஆம் திகதி கிடைக்கும் எனவும் இதனூடாக சுமார் 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் பெறப்படவுள்ளதாகவும் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மேலும் 100,000 வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய வெற்று கடவுச்சீட்டுகள் கருப்பு முகப்பைக் கொண்டுள்ளதோடு அவை போலந்தில் தயாரிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் உற்பத்தி செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று போலந்தில் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image