ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு - நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு!

ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு - நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு!
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகள் என்பவற்றுக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபாவின் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
கல்வி அமைச்சின் செயலாளர் உரிய அதிகாரமின்றி குறித்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். 
 
சட்டத்திற்குப் புறம்பாக இலங்கை ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளும் நோக்கில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் மன்றுரைத்துள்ளனர். 
 
இந்தநிலையில் குறித்த மனுமீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில் மனுதாரர்கள் கோரியுள்ள சகல இடைக்கால நிவாரணங்களையும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. 
 
இதன்படி பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் செயன்முறை பரீட்சைகள் உள்ளிட்டவற்றுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image