பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்க ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானம்
தமது பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.
ரயில் நிலைய அதிபர்கள் நேற்று(09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
5 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் பதவியுயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
இன்று(10) நண்பகல் 12 மணிக்கு பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியதைப் போன்று கருதப்படுவார்கள் என ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்த பின்னணியிலேயே ரயில் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக ரயில் நிலைய அதிபர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.