கம்பனிகளுக்கு எதிராக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொழும்பில் போராட்டம்

கம்பனிகளுக்கு எதிராக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொழும்பில் போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க கோரி, கொழும்பில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இலங்கை தோட்ட துறைமார் சங்க கட்டிடத்திற்கு முன்பாக நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் முதலாளிமார் சம்மேளனம் வழக்கொன்றை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம்இ குறித்த வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு இடைகால தடை விதித்தது.

இந்த நிலையில், பெருந் தோட்ட முகாமைத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image