சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் திருத்தச் சட்டமூலம் விரைவில்

சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்கும் திருத்தச் சட்டமூலம் விரைவில்

சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்டசொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான திருத்த சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

காலி  காலியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று பொதுமக்களுக்கான அரச சேவை சிறப்பாக இல்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். இது தவறு. ஒரு சில அரசு ஊழியர்கள் இலஞ்சம் வாங்கினாலும், அரசு ஊழியர்கள் கௌரவமான சேவை செய்து வருகின்றனர். இலஞ்சம் மற்றும் மோசடியை தடுக்க வலுவான புதிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த சில மாதங்களில் சட்ட கட்டமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் 75 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டை கட்டியெழுப்ப வலுவான சட்ட கட்டமைப்பு தேவை. கடந்த காலத்தில் நாங்கள் அதனை செய்துள்ளோம். உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் சட்டத்தின் ஆட்சி வலுப்படுத்தப்பட்டமையே முதன்மைக் காரணமாகும். வளர்ந்த நாடாக மாற வலுவான சட்ட கட்டமைப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.

மூலம் - தினகரன்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image