பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

பொது போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் பிரிவு 2-இன் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, பயணிகள் அல்லது பொருட்களின் போக்குவரத்திற்கான பொது போக்குவரத்து சேவைகள், வீதிகள், பாலங்கள், ரயில் பாதைகள் ஊடான போக்குவரத்து மற்றும் அதன் பராமரிப்பு ஆகியனவும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (29) முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image