மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை
மாணவர்கள், பாடசாலைகள், கல்வியல் கல்லூரிகள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கல்வி அமைச்சு பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளது.


கல்வி அமைச்சின் செயலாளரினால் பாதுகாப்பு செயலாளரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா பணியாளர்கள் இன்றும் நாளையும் தங்களது தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம்,  கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
 
மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image