யாழ். பல்கலைக்கழக ஐனநாயக ஊழியர் சங்கத்தினர சத்தியாகிரக போராட்டம்

யாழ். பல்கலைக்கழக ஐனநாயக ஊழியர் சங்கத்தினர சத்தியாகிரக போராட்டம்
53 ஆவது நாள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஐனநாயக ஊழியர் சங்கத்தினரின் தமது சத்தியாகிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
 
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட பிரதான வாயிலில் இச்சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 
இதேவேளை யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் முன்னெடுக்கும் சத்தியாகிரக போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் தொடர்கிறது.
 
சம்பள முரண்பாடுகளை நிவர்த்திசெய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை 53 ஆவது நாளாகவும் முன்னெடுத்துவருகின்றனர்.
 
 
Jaffna_uni_protest.jpg
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image