ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்த்தல் அறிவித்தல்

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்த்தல் அறிவித்தல்

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில்,

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3- I (இ) இற்கு ஆட்சேர்த்தல் – (2021) 2024தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களை நிலைப்படுத்துவதற்கான விண்ணப்பப் படிவம்

நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3 –I (இ) இற்கு ஆட்சேர்ப்பதற்காக 2021.12.12ம் திகதியன்று நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் 2024.05.10, 11, 13 மற்றும் 20ம் திகதிகளில் நடாத்தப்பட்ட பிரயோகப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தகுதிபெற்ற டிப்ளோமாதாரர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக தகவல்களை சேகரிக்கும் பணிகள் நிகழ்நிலை மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளது

அதற்கமைய teacher.moe.gov.lk எனும் இணைப்பினூடாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளின் படி 2024.06.24 ம் திகதி முதல் 2024.06.26 ம் திகதி வரையில் அந்த டிப்ளோமாதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

விபரமும் பெயர்ப்பட்டியலும்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image