அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: பிரதமர் வௌியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம்: பிரதமர் வௌியிட்ட தகவல்
அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று (08) பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார்
 
அரச நிறைவேற்றுத்துறை அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையால் அவர்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.   
 
அரச துறைசார் 18 தொழிற்சங்கங்களை சேர்ந்த பல்வேறு பதவி நிலை வகிக்கும் நிறைவேற்றுத்துறைசார் 42,000 ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
 
இதற்குப் பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, 
 
சம்பளம் தொடர்பில் தேசிய கொள்கை ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, காலத்திற்கு காலம் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டதால் சம்பளம் தொடர்பில் சில துறைகளில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அதனை ஏற்றுக்கொள்வதோடு அதற்காக முழுமையான தலையீடு அவசியமாகும்.
 
இதற்கமைய நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்துடன் நானும் அமைச்சின் செயலாளரும் கலந்துரையாடினோம்.  அந்தக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு அமைய இந்த விடயத்தை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்று துறை அதிகாரிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
 
பிரதமரின் செயலாளரின் தலைமையில், பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோர் அடங்கிய  நடவடிக்கை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
இந்த குழுவானது அரச நிறைவேற்றத்துறை அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழுவுடன் கலந்துரையாடி உள்ளத்துடன் நடவடிக்கை குழுவின் அறிக்கையும் விரைவாக முன்வைக்கப்பட உள்ளது.
 
அதேநேரம், அரச சேவைகள் ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பின்னர் நடவடிக்கை எடுக்க முடியும். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image