இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பம் கோரல்

இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பிற்கான விண்ணப்பம் கோரல்
தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவித்தலில்,

 

அறிவித்தல் கடிதம்

 கருத்தில் கொள்க

  1. விண்ணப்பதாரர் ஒருவர் நிகழ்நிலை முறைமையினுள் பிரவேசிப்பதற்காக பயனர் பெயராக (user name) தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கடவுச் சொல் (password) ஒன்றைப் பயன்படுத்தி பயனர் கணக்கு ஒன்றை திறந்துகொள்ள வேண்டும் என்பதுடன், நிலைப்படுத்தல் தொடர்பான தகவல்களை வழங்கும் வரையில் தரவு முறைமையினுள் பிரவேசிப்பதற்காக குறித்த பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை தங்கள் வசம் வைத்திருப்பது கட்டாயமாகும்.
  2. அவ்வாறே நிகழ்நிலை முறைமையினுள் பிரவேசித்து விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூரணப்படுத்தி அதனை சமர்ப்பித்ததன் (submit) பின்னர் மீண்டும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்பதால் அறிவுறுத்தல்களை முறையாக வாசித்ததன் பின்னர் தரவுகளை உள்ளீடு செய்தல் வேண்டும்.
  3. இருப்பினும் கணக்கிற்குரிய பயனர் பெயர் (user name) மற்றும் கடவுச் சொல்லைப் (password) பயன்படுத்தி நிகழ்நிலை முறைமை இயக்க நிலையில் காணப்படும் காலப் பகுதியினுள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களால் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பரீட்சித்துப் பார்க்க முடியும்.
  4. நிலைப்படுத்தும் போது தாங்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கி தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்டுள்ள பெறுபேறுகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது பாடத்திற்குரிய திறமை வரிசையை கருத்தில் கொண்டு மாத்திரமே நிலைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.
  5. அத்தியாவசியமான வெற்றிடங்களுக்காக தாங்கள் விருப்புத் தெரிவிக்காதிருந்தாலும், திறமை வரிசையில் ஆகக் கீழ் உள்ள விண்ணப்பதாரர்களில் இருந்து சேவையின் தேவை கருதி குறித்த அத்தியாவசியமான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என்பதுடன், தாங்கள் உரித்தாகும் மாகாணத்தினுள் நிலவும் உரிய பாடங்களுக்குரிய வெற்றிடங்கள் போதியளவில் இல்லாத பட்சத்தில், வெற்றிடங்கள் நிலவும் வேறு மாகாணம் ஒன்றிற்கு தங்களை நிலைப்படுத்த நேரிடும்.
  6. அத்துடன் உறுதிப்படுத்தப்பட்ட வெற்றிடங்களுக்கு மாத்திரமே நிலைப்படுத்தல் மேற்கொள்ளப்படும் என்பதுடன் அதிபர்களால் முன்னிலைப்படுத்தப்படும் கோரிக்கைகள் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
  7. VII. ஸ்ரீ பாத தேசிய கல்வியியல் கல்லூரியில் பாடநெறிகளைத் தொடர்ந்த மத்திய, ஊவா மற்றும் சபரகமுவா மாகாண அடிப்படையில் உரிய பயிலுனர்களின் பெயர்கள் இந்த தரவுத் தளத்தினுள் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், அவர்களது ஆட்சேர்ப்பு அடிப்படைக்குரிய மாகாணத்தின் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளரால் அவர்களது நிலைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.
  8. மேலே குறிப்பிடப்பட்ட செயன்முறையை முறையாகப் பின்பற்றி பாடங்களுக்குரியதாக தேசிய கல்வி நிறுவகத்தினால் வழங்கப்பட்டுள்ள திறமைகளின் வரிசைப் படி நிகழ்நிலை (online) முறைமையை அடிப்படையாகக் கொண்டு. மாத்திரமே நிலைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றமையால், தாங்கள் எதிர்பார்க்கும் சேவை நிலையத்திற்கே நியமனம் வழங்குவதாக வாக்குறுதியளித்து, பணம் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் மோசடி நபர்களிடம் சிக்காமல் தவிர்ந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்படுகின்றது.

 

Download Tamil Instructions

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image