தொழிலாளர் சட்டத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்

தொழிலாளர் சட்டத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டத்தை திருத்துதல் மற்றும் உத்தேச புதிய வேலைவாய்ப்பு சட்டமூலம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌவர மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் "இலங்கையை வெற்றி கொள்வோம்" மக்கள் நடமாடும் திட்டத்திற்கு சமாந்தரமாக இந்நிகழ்வு அனுராதபுர சல்காது மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது புதிய தொழில் பாதுகாப்புச் சட்டத்தின் நன்மைகள் மற்றும் நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து அமைச்சரினால் விளக்கமளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
May be an image of 4 people and people smiling

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image