ப்ரொடெக்ட் சங்கத்தின் புதிய நிர்வாக குழு

ப்ரொடெக்ட் சங்கத்தின் புதிய நிர்வாக குழு

ப்ரொடெக்ட் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மையத்தில் நடைபெற்றது.

அங்கு 2023 ஆம் ஆண்டு சங்கத்தின் நிலைமை தொடர்பில் மீளாய்வு செய்தல் மற்றும் புதிய நிர்வாகிகள் குழு நியமனம் மற்றும் அடுத்த ஆண்டுக்கான இலக்குகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் பற்றிய திட்டமிடல் இடம்பெற்றது. 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டத்தின் அறிக்கை சமர்ப்பணத்தை செயலாளர் கல்ப மதுரங்க முன்வைத்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பணத்தை பொருளாளர் லசந்த குமார மற்றும் மனோஜனி ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டது.

சங்கத்தின் 2023-2027 மூலோபாயத் திட்டத்திற்கு அமைய, 2024 இல் சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டன. இதன்போது ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி  சுவஸ்திகா அருலிங்கம் கலந்து கொண்டு, முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முறைசாரா துறை தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

ஹட்டன், கொழும்பு, லக்ஷபான ஆகிய கிளைகளின் பொதுக் கூட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அமைப்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர். கிளைகளின் தலைவர்கள் தங்கள் கிளைகளின் வளர்ச்சி குறித்து விளக்கமளித்தனர். மற்றும் உறுப்பினர்களின் முன்மொழிவுகளின் ஒப்புதலின்படி புதிய நிர்வாக குழு நியமிக்கப்பட்டது.

தலைவர் கே. மைதிலி, துணைத் தலைவர் எச்.டபிள்யூ. தனுஜா தில்ருக்ஷி, செயலாளர் கே.ஏ. கல்ப மதுரங்க, துணைச் செயலாளர் டி. கிருஷாந்தினி, பொருளாளர் எச்.ஐ. லசந்த குமார, குழு உறுப்பினர் தமயந்தி தில்ருக்ஷி, குழு உறுப்பினர் எஸ். உதயராணி, குழு உறுப்பினர் எம்.எஸ். ஆஷினி, குழு உறுப்பினர் கே.எம். சதுரிகா பிரியதர்ஷனி, குழு உறுப்பினர் எல்.ஆர். இந்துனில் லக்மாலி, குழு உறுப்பினர் டி. ரித்மா பீரிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image