அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ள உள்ள தீர்மானம்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ள உள்ள தீர்மானம்!

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட சில காரணங்களை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் மத்திய குழு கூடி இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளாவிட்டால் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தங்களது தொழிற்சங்கம் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image