தபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

தபால் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது.

 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர் ருவன் சத்குமார இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என அதன் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

No description available.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image