நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக இன்று நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக இன்று நுவரெலியாவில் போராட்டம்

நுவரெலியாவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட பழமையான தபால் நிலையத்தை  இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இன்று வியாழக்கிழமை (09) நண்பகல் 12 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம்  நடத்தப்படவுள்ளது.

அஞ்சல் தொலைத்தொடர்பு ஊடக சங்கம் இதனைத்  தெரிவித்துள்ளது.

நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் புதிய ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த 6 முதல் 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், தற்போது இவ் வேலை திட்டம் தீவிரமடைந்துள்ளது. இதற்கு எதிராக நுவரெலியா நகரில் உள்ள  ஏழுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் இணைந்து இவ் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைவரும் இணைந்து  ஆதரவினை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும், கடமைகளுக்கு சமுகளிக்காது நுவரெலியா தபால் பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக  நுவரெலியா  நகரத்திலுள்ள அனைத்து  வர்த்தக நிலையங்களையும் இனறு நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

May be a graphic of text that says "නි නැ තැපැල් හා විදුලි සංදේශ නිලධාරීන්ගේ සංගමය அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கம் Union of Post and Telecommunication officers' දෙදින වැඩ වර්ජනයට සමගාමීව, 2023 නොවැම්බර් මස 9 වන දින නුවරඑළිය තැපැල් කාර්යාලය ඉදිරිපිට තැපැල් සේවකයින් ඇතුලු සිවිල් සංවිධාන එක්ව දැවැන්ත උද්සෝෂණ ව්‍යාපාරයක්.... இரண்டு நாள் வேலை நிறுத்தத்துடன் தபால் இணைந்து நவம்பர் 2023 அன்று நுவரெலியா நிலையத்திறகு முன்பாக தபால் ஊழியர்கள் உட்பட சிவில் அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் கண்டனப் போராட்டம் In combination with the two- days token strike, a massive protest campaign will be organized with civil organizations including postal workers in front of Nuwara Eliya Post Office premises on November 9th #SaveNuwsrseliyaPostOffice #SaveOurHeritage NOTFOR SALE"

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image