நட்டஈடு கோரி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்!

நட்டஈடு கோரி பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக போராட்டம்!

"பிரித்தானிய ஆட்சியரே! மலையக மக்களுக்கு நட்டஈடு கொடு!" என வலியுறுத்தி, கொழும்பிலுள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் நேற்று (30) கவனயீர்ப்பு அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டது.

மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டளார்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

 'மலையக மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து, நில உரிமையைப் பெற்றுக்கொடு' என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

 மலையக மக்களைக் காக்கும் இயக்கத்தின் ஆலோசகர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

Britain2

Britain3

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image