வௌிநாட்டு வேலை - மோசடி அதிகரிப்பு!

வௌிநாட்டு வேலை - மோசடி அதிகரிப்பு!

நாட்டில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு  பெற்றுத்தருவதாக  கூறி மக்களை ஏமாற்றுவது அதிகரித்து வருவது தொடர்பில் இலங்கை வௌிநாட்டு ​வேலைவாய்ப்பு பணியகம் கவலை வௌியிட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் கருத்து வௌியிட்ட பணியகத்தின்பயிற்சிக்கான பிரதி முகாமையாளர் பி.ஜி.ஜி.எஸ் யாப்பா இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இவ்வாண்டு மாத்திரம் பணியகத்திற்கு மோசடி தொடர்பாக 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டு 552 முறைப்பாடுகள் மாத்திரமே பதிவாகியுள்ளன. இவ்வாண்டு முதல் 5 மாதங்களில் அவ்வெண்ணிக்கை 1156 ஆக அதிகரித்துள்ளது.

இத்தரவுகளுக்கு அமைவாக மக்கள் மிக வேகமாக இம்மோசடிகளுககு ஆளாகின்றனர் என்றும் பிரதி முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image