போட்டிப்பரீட்சை நாளை நடைபெறாது!

போட்டிப்பரீட்சை நாளை நடைபெறாது!

நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில், நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நாளைய தினம் இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த போட்டிப் பரீட்சை நாளைய தினம் நடத்தப்படவிருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில், இந்த பரீட்சை இடம்பெற மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் கிடைக்கப்பெறவுள்ள உயர்நீதிமன்றின் தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பரீட்சை மீண்டும் நடத்தப்படும் திகதியை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு செய்யப்படும் வரை போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

போட்டிப் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் சட்ட விரோதமானது எனவும், இதற்காக அமைச்சரவை உரிய முறையில் தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை எனவும், மனுதாரர்கள் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனுக்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், குறித்த போட்டிப் பரீட்சையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்தே, குறித்த போட்டிப் பரீட்சை நாளைய தினம் இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image