மேன்முறையீடு விண்ணப்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

மேன்முறையீடு விண்ணப்பம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை இணைக்கும் நேர்முகப் பரீட்சைக்கான மேன்முறையீடுகள்  ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை இணைக்கும் நேர்முகப் பரீட்சைக்கான மேன்முறையீடுகள் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

 

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில்  கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயினர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தொடர்பான மேன்முறையீடுகளை பெப்ரவரி 28ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேன்முறையீடுகள் இருப்பின் "கல்வி பணிப்பாளர் (கல்வியல் கல்லூரிகள்), கல்வியியல் கல்லூரிகள் கிளை, கல்வி அமைச்சு, இசுருபாய, பத்திரமூல்ல" எனும் முகவரிக்கு விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பதாரிகளால் அனுப்பி வைக்கப்படும் மேன்முறையீட்டில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் உள்ளடங்கிய இருத்தல் வேண்டும்.

1. விண்ணப்பிப்பதற்குரிய கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சை வருடம்.
2. பாடத்திட்டம் : புதிய / பழைய
3. உயர்தர பரீட்சை சுட்டிலக்கம் மற்றும் பெறுபேறு (Z புள்ளியுடன்)
4.  மேன்முறையீடு செய்வதற்கான காரணம்.
5.  விண்ணப்பதாரியின் பெயர் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்.
6. விண்ணப்ப படிவத்தின் வன் பிரதி ( அச்சு பிரதி) (PDF  பிரதி)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image