மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா? தென் மாகாண தொழிற்சங்க உறுப்பினர் கேள்வி

மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா? தென் மாகாண தொழிற்சங்க உறுப்பினர் கேள்வி

அரசு சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டு மக்களுக்கு சுதந்திரம் உள்ளதா என்ற கேள்வியும் ஏற்பட்டுள்ளது என்று தென் மாகாண தோட்ட தொழிலாளர்களின் சங்கத்தின் மகளிர் பிரிவு உறுப்பினர் எஸ்.காந்திமதி தெரிவித்தார்.

தென் மாகாண தோட்ட தொழிலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது, ஒரு நேர சாப்பாட்டிற்கு வழி இல்லாது இருக்கும் தோட்ட தொழிலாளர்களை பற்றியேனும் சிந்திக்காது நீங்கள் கோடி கணக்கில் செலவு செய்து சுதந்திர தினம் கொண்டாடுகின்றீர்கள்.
எமது பிரதேசத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு பாதைகள் சீரற்று காணப்படுகின்றன, ஒழுங்கான வீடுகள் இல்லை, கல்வி கற்கும் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர், தோட்டங்களில் அவசர சிகிச்சைக்கான வைத்தியசாலைகளோ வைத்திய வசதிகளோ இல்லாத நிலையில் வாழ்ந்து வரும் எமது நிலைப்பற்றி எவ்வித அக்கறையும் இல்லாது நீங்கள் சுதந்திர தினத்திற்கு கோடி கணக்கில் செலவிடுவது நியாயமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொழிலாளர்களுக்கு பத்து பேர்ச் நிலம் தருகின்றோம் தனி வீட கட்டி தரகின்றோம் என்று எத்தனையே தடவைகள் அறிவிக்கப்பட்ட போதும் எங்கு தனி வீடு கட்டி யாருக்கு கொடுத்துள்ளீர்கள் என்று யாரும் அறியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image