நிதி நெருக்கடியில் திறைசேரி: அரச ஊழியர்களின் சம்பளம்?

நிதி நெருக்கடியில் திறைசேரி: அரச ஊழியர்களின் சம்பளம்?

திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

இதனால் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை கூறினார்.

2023 ஆம் ஆண்டு எதிர்பார்த்ததை விட மிக மோசமான  நிதி நெருக்கடியை திறைசேரி எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். 

பொருளாதார நெருக்கடியால் 2022 ஆம் ஆண்டு வரிகள் ஊடாக அறிவிடப்பட்ட நிதி குறைவடைந்துள்ளதாகவும் ஜனவரி, பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வரிகளூடாக அரசாங்கத்திற்கான நிதி பாரிய அளவில் வீழ்ச்சியடைந்தாலும், அத்தியாவசிய செலவுகளைக் கட்டாயம் கவனிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியக் கொடுப்பனவு, அரச கடனுக்கான வட்டி, நலன்புரி செலவுகள் உள்ளிட்ட நாளாந்த செலவுகளுக்கு தேவையான பணம் திறைசேரியிடம் இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

மூலம் - நியூஸ்பெஸ்ட் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image