அதிபர் - ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சரின் புதிய அறிவித்தல்

அதிபர் - ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சரின் புதிய அறிவித்தல்

பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த  அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலும் அமுலுக்கு வரும் இத்திட்டம், ஒரு மாதத்திற்குள்
நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி, மாணவர்களை உள்வாங்குவதற்கு பெற்றோர்கள் விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்கும் வகையில், அடுத்த தவணை முதல், புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்

புதிய திட்டத்தின் கீழ், மாகாண பாடசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளுக்கு இரண்டு நடைமுறை பின்பற்றப்படும்.

தற்போதுள்ள சுற்றறிக்கை விதிகளை மேலும் நெறிப்படுத்தவும், நியாயமான மற்றும் சமமான அணுகுமுறைகளை உருவாக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்ட முறையின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏற்படும் வெற்றிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெற்றிடங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வழக்கமான முறைமை பின்பற்றப்படும்.

நேர்முகத் தேர்வு அந்தந்த பாடசாலை அதிபர்களால் மேற்கொள்ளப்படும்  என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.

மூலம் - அரசாங்க தகவல் திணைக்களம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image