2023 ஜனவரிக்குள் ஓய்வுபெறவுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

2023 ஜனவரிக்குள் ஓய்வுபெறவுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கான சுற்றறிக்கை அடுத்த இரு தினங்களில் வெளியிடப்படுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்தார்.

ஆண்டுக்கு சுமார் 18,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதாகவும், ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றப்பட்டுள்ளதால், ஜனவரி  மாதத்திற்குள் 25,000 பேர் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

ஆண்டுக்கு ஒய்வு பெறும் முப்படைகளின் எண்ணிக்கை எட்டாயிரம் முதல் ஆயிரம் வரை இருக்கும். இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் 4000 இராணுவ வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற உள்ளனர். 3,400 அரசு ஊழியர்கள் ஏற்கனவே ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அரசு கொள்கைப்படி ஓய்வு பெறும் வயதை 65 ஆக நீடித்ததால், அரச ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. ஆனால் தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் வரும் மாதங்களில் ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image