அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு நிலுவை ரூ.1550 கோடி

அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு நிலுவை ரூ.1550 கோடி

அரச ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள 1,550 கோடி ரூபாய் ஓய்வூதிய கொடுப்பனவு பணிக்கொடைத் தொகையை 06 மாதங்களுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் 1,700 கோடி ரூபாவுக்கும் அதிகமான ஓய்வூதிய கொடுப்பனவு பணிக்கொடை நிலுவைத் தொகையாக வழங்கப்படவிருந்ததுடன், திறைசேரியினால் 1,500 மில்லியன் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டுக்குரிய மீதிப் பணத்தை ஓய்வூதியத் திணைக்களத்துக்கு இந்த ஒக்டோபர் மாத இறுதிக்குள் வழங்குவதற்குத் தேவையான 1550 கோடி ரூபாவை வழங்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளதாக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் நேற்று (07) தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியப் பணிக்கொடையைச் செலுத்துவதற்குத் தேவையான நிதித் தொகையை 06 மாதங்களுக்குள் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை காலதாமதமாகி வந்த அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை வழங்குவதற்காக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், 1,700 கோடிக்கும் அதிகமான ஓய்வூதியப் பணிக்கொடை வழங்கப்பட வேண்டியிருந்தது, மேலும் பொது திறைசேரி பணிக்கொடைத் தொகையை வழங்குவதற்காக 1,500 மில்லியனை விடுவித்துள்ளதாக ஓய்வூதியச் சம்பளப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image